Posts

வாழ்வியல் சிந்தனை 🤔🤔🤔 பக்குவம் அவசியம்

Image
*தினம் ஒரு கதை!  *பக்குவம்…*   ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான். “இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது” என்று. அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான். *“ விடு! எல்லாம் நன்மைக்கே”* சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்து விட்டது என்று. இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். “ எல்லாம் நன்மைக்கே”.  மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். இதென்ன உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று. அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான். ‘எல்லாம் ந...

மகிழ்ச்சி என்பது...?

Image
தினம் ஒரு கதை! மகிழ்ச்சி என்பது ...   அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி  அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது. காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது. “எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்க...

சிட்டுக்குருவியை காக்கும் கிராமம்

தினம் ஒரு தகவல்  *சிட்டுக்குருவியை காக்கும் கிராமம் - குருவிக்காக இருளில் வாழும் கிராம மக்கள்* சிட்டுக்குருவிகள் கூடு கட்டினால் ஊருக்கு நன்மை பெருகும் என்ற நம்பிக்கையில், மின் இணைப்பு பெட்டியில், கட்டப்பட்டிருந்த கூட்டை களைக்காமல், இருளில் வாழ்ந்து வருகிறது ஒரு கிராமம்.  சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு இணைப்பு பெட்டியில்  குருவிக்கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இதையறிந்த இந்த கிராமத்து இளைஞர்கள், அதை பாதுகாக்க தொடங்கினர்.   தெருவிளக்குகள் எரிய மொத்த கன்ட்ரோல் ஸ்விட்ச்சும், குருவி கூடு கட்டிய மின் இணைப்பு பெட்டியில் இருப்பதால், சுவிட்சை ஆன் செய்யக்கூட முடியவில்லை. சுவிட்ச் போட்டால், குருவி பறந்து என்பதால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியாமல் இருளில் வாழ்ந்து வருகிறார்கள் பொத்தகுடி கிராமமக்கள்.  சின்னஞ்சிறிய குருவிகள் கூடு கட்டினால் நல்ல சகுனம் என்றும், ஊருக்கும் மக்களுக்கும், நன்மை அதிகரித்து, அதிர்ஷ்டம் பிறக்கும் என்று கூறுகின்றனர் அக்கிராம மக்க...

காமராஜரின் பொன்மொழிகள்

Image
             தினம் ஒரு தகவல்   காமராஜரின் பொன்மொழிகள் !   🎇 நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன் தான்! 🎇 எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்! 🎇 எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை! 🎇 சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது! 🎇 பணம் இருந்தால் தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதை எனக்குத் தேவையில்லை! 🎇 ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது ஆகும்! 🎇 நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமாவான்! 🎇 எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்! 🎇 கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்த ஒரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைவது இல்லை! 🎇 ஒன்றை செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என்று எண்ண வேண்டும்!  🎇 சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத...

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!

Image
                      தினம் ஒரு தகவல் பழமொழிகளை அறிந்து கொள்வோம்! 🙏ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்! 👎விளக்கம்:  மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். 👍சரியான விளக்கம்:  ஊரான் வீட்டு பிள்ளையாகிய தன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும்  உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள். 🙏பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! 👎விளக்கம்:  மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள். 👍சரியான விளக்கம்: வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள். 🙏ஆவதும் பெண்ணாலே, அழிவது...

சக மனிதன்

Image
                    தினம் ஒரு தகவல்    

நட்சத்திரத்தின்_காலம்

Image
                      தினம் ஒரு தகவல்  நட்சத்திரத்தின்_காலம் இரவு நேரத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரத்தை(விண்மீன்) ரசிகாதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். இந்த நட்சத்திரங்கள் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?  இதெல்லாம் ஒரு கேள்வியா? அது ரொம்ப தூரத்தில் இருக்கிறது என்று உங்கள் mind voice யில் சொல்வது கேட்கிறது. சரி ரொம்ப தூரம் என்றால் எவ்வளவு தூரம்? சூரியனை தவிர நாம் காணும் ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் புவியில் இருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.  கிலோமீட்டர் போன்ற கணக்கீடுகளால் எளிமையாக அளவிட முடியாத தூரத்தை ஒளியாண்டு என்று அலகின் மூலம் அளவிடுகிறோம்.  1 ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் செல்லும் தூரமே ஒரு ஒளியாண்டு . ஒளியானது ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. அப்படி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளி ஒரு வருடத்திற்கு தொடர்ந்து பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரம் தான் 1 ஒளியாண்டு தூரம். அப்ப...