முக்கிய செய்திகள் எளிய புரிந்துகொள்ளும் வகையில்


 முக்கிய செய்திகள்


உலகச் செய்திகள்


முதல் ரோவரை அனுப்பிய சீனா:

சீன விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் தியான்வென் 1 ரோவர், வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பப்பட்டது.

புதிய போர்க்கப்பலை அறிமுகப்படுத்திய சவூதி:

ஸ்பெயினுடனான கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலை காணொளி காட்சியின் மூலம் சவூதி அரேபியா கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மாநிலச் செய்திகள்


ரூ.1 லட்சம் வரை அபராதம்:

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்:

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டினார்:

பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூரில் 3,054 கோடி ரூபாய் செலவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு காணொளி காட்சியின் மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

தமிழகத்தில் 16 நிறுவனங்கள் 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமாகியுள்ளன.

கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்கக்கூடாது:

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் வழங்கக்கூடாது என்றும், மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே பயிர்க்கடன் வழங்கலாம் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது:

மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதற்கு 12ஆம் வகுப்பில் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. 

மாவட்டச் செய்திகள்

 

இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை:


காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு, இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

விளையாட்டுச் செய்திகள்


3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி:

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நாளை (24ஆம் தேதி) தொடங்கவுள்ளது. 

 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்க👇




THANKYOU ALL

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Federal Government work (Constable) Vacancies: 5846

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி