ஆன்லைன்_சூதாட்டம் சரியா சிந்தித்து செயல்படுவோம்
*ஆன்லைன்_சூதாட்டம்*
எவ்வளோ மெனக்கெட்டாலும் புரிஞ்சிக்க முடியாத விஷயங்கள்னு சில உண்டு. அதுல ஒண்ணு தான் இந்த சட்டமும் போல..
தப்புன்னு ஒரு இடத்துல சொல்லுற விசயத்த, இன்னொரு இடத்துல அது சரின்னு சொல்லும், இல்ல கண்டுக்காம நழுவும். மிகப்பெரிய குற்றம்னு ஒரு இடத்துல இருப்பது, இன்னொரு இடத்துல தாராளமா பண்ணலாம்னு இருக்கும்.
அப்படி சமீப காலத்துல என்னை பயங்கரமா குழப்புன சட்டம் தான் இந்த சூதாட்டம் பத்தியது.
"டிக்டாக்"ல பொழுத போக்கிட்டு இருக்கும் போது நடிகை ராஷ்மிகா "ஆன்லைன்ல ரம்மி விளையாடுங்க.."ன்னு விளம்பரம் பண்ணிட்டு இருந்துச்சு.
மேல தள்ளி விட்டு கொஞ்ச நேரத்துல, இன்னொரு விளம்பரம். இரண்டு பொண்ணுங்க, இரண்டு பசங்க உட்காந்துருக்காங்க. அதுல ஒருத்தன், "நான் ஆன்லைன ரம்மி விளையாடும் போது தான் இந்த பொண்ண பாத்தேன். இப்ப நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். அதே மாதிரி என் ப்ரெண்டும் அவன் லவ்வரும் இவங்க"ன்னு பேசிட்டு இருந்தான்..
இது எல்லாமே காசு கட்டி விளையாடும் விளையாட்டுகள் தான். ஒரு வகைல உங்கள இதுக்கு அடிமையாக்குற தன்மை (Addiction) உண்டு.
சில மாதங்களுக்கு முன்னாடி படிச்ச ஒரு செய்தி.
மதுரைல புதுசா கல்யாணம் ஆன ஒரு தம்பதி. கணவன் இந்த மாதிரி ஆன்லைன் சூதாட்டத்துல விளையாண்டு, கொஞ்சம் காசு ஜெயிச்சதும், "அட இதுலையே நிறைய சம்பாதிக்கலாம் போலையே"னு மேலும் மேலும் விளையாண்டு, கடைசில ஊருக்குள்ள அஞ்சு லட்சம் வரை கடன். கடைசில கடன் கழுத்தை நெறிக்கவும், பொண்டாட்டியோட தூக்கு மாட்டி செத்ததா செய்தி.
இப்ப இந்த நடிகை ராஷ்மிகா இதுக்கு பொறுப்பேத்துக்கவா போகுது?? இல்ல இந்த சூதாட்டத்த நடத்துறவன அரசு சட்டம் தண்டிக்கப் போகுதா?
இதுல என்ன காமெடின்னா, நமக்கு எதிரா விளையாடுறது மனுஷனான்னு கூட நமக்கு தெரியாது. அது ஒரு கம்ப்யூட்டரா தான் இருக்கும். அத (RO)BOTனு சொல்லுறாங்க. இதுல தான் நம்மாளுங்களும் ஏமாந்து காசையும் உயிரையும் உடுறாங்க.
திண்னைல உட்காந்து சூதாடுனா குத்தம், போலீஸ் புடிக்கும். லாட்டரி சீட்டு வாங்குனா கைது சிறை எல்லாம் போடுவாங்க.
அதோ செல்போன்ல ஆடுனா குத்தம் இல்லை.. செத்தா அதுக்கு யாரும் பொருப்பும் இல்ல ?!
என்னங்க இது சட்டம்? பெரிய கம்பெனி நடத்தினா அது சூதாட்டம் இல்லையா?
யாரும் ஏமார வேண்டாம் மக்களே🤔🤔
Comments
Post a Comment