வாழ்வியல் சிந்தனை 🤔🤔🤔 பக்குவம் அவசியம்

*தினம் ஒரு கதை! *பக்குவம்…* ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான். “இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது” என்று. அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான். *“ விடு! எல்லாம் நன்மைக்கே”* சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்து விட்டது என்று. இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். “ எல்லாம் நன்மைக்கே”. மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். இதென்ன உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று. அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான். ‘எல்லாம் ந...