யாருக்கெல்லாம் தெரியும் கன்னியாகுமரி தொட்டிப்பாலம் பற்றி

                                   அடடே


கன்னியாக்குமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலம் மாத்தூர் தொட்டிப் பாலம்.



  • இது காமராஜர் ஐயாவின் சாதனைகளில் ஒன்று.  
  • கன்னியாகுமாரி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முதல்வரால் 1963யில் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது. இப்பலாம் *தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலம்* என்னும் பிரசித்தி பெற்றது.

  • தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

  • மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள  மகேந்திரகிரி  மலையில்  உற்பத்தியாகிறது  பறளியாறு. அருகில் இருந்த மலைகளால் பறளியாறு  கன்னியாகுமாரி மாவட்டம்,  மாத்தூர் பகுதில் பாய முடியாமல் போனதால் அந்த பகுதியில்  வறட்சி  ஏற்பட்டது.

  •  இந்த வறட்சியை தீர்க்க மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இடையில் அமைக்கப்பட்டுள்ளதே இந்த தொட்டி பாலம். 
 
  • இப்பாலத்தின் நீளம் 1204 அடியாகும். தரைமட்டத்திலுருந்து சுமார் 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டுள்ளது. 

  • இந்த பாலத்தின் ஒரு பக்கத்தில் கால்வாய் மேல் கான்கிரீட் பலகைகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் அந்தக் கால்வாய் மீது நடந்து செல்கிறார்கள். தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி அகலமும் ஏழு அடி உயரமும் உள்ளது. 

  • அணையிலிருந்து மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது. பல எக்டேர் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றியப் பெருமை மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு உண்டு.
 
வளர்ச்சி என்பது பொது சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும். ஒரு சில கார்பொரேட் முதலாளிகளின் சொத்து குவியலுக்கானதின் பெயர் வள கொள்ளை!





                             JOIN US👇


                      THANK-YOU ALL

Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846