ஒருவரின் தரம்

                ஒருவரின் தரம்!  



ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது.

  • அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை.

  • இறப்பின் போதும், இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.

  • அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச் சென்றான். சந்தித்து, விவரம் சொன்னான்.

  • அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன்."

  • "அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார்.

  • இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரல. அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னார்."

  • "அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம்னு பட்டது. அதனால நானும் அதை விட்டுட்டேன்" என்றார்."

  • எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும் அதைத் திரும்பக் கொடுக்குறது தான் அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான் நண்பர் நெகிழ்ந்தார்.

  • ஒரு மனிதனின் பண்பும் செயலும் தான் சமூகத்தில் அவன் தரத்தை தீர்மானிக்கிறது.

  • இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். 

  • இது தான் வழக்கு மொழியில்,
  • நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை; கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று சொல்வார்கள்.

JOIN GROUP 👇👇


     

                        THANK-YOU ALL
      






Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846