நட்சத்திரத்தின்_காலம்
தினம் ஒரு தகவல்
நட்சத்திரத்தின்_காலம்
- இரவு நேரத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரத்தை(விண்மீன்) ரசிகாதவர்கள் யாரும் இருக்க மாட்டோம். இந்த நட்சத்திரங்கள் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
- இதெல்லாம் ஒரு கேள்வியா? அது ரொம்ப தூரத்தில் இருக்கிறது என்று உங்கள் mind voice யில் சொல்வது கேட்கிறது. சரி ரொம்ப தூரம் என்றால் எவ்வளவு தூரம்? சூரியனை தவிர நாம் காணும் ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் புவியில் இருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. கிலோமீட்டர் போன்ற கணக்கீடுகளால் எளிமையாக அளவிட முடியாத தூரத்தை ஒளியாண்டு என்று அலகின் மூலம் அளவிடுகிறோம்.
- 1 ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் செல்லும் தூரமே ஒரு ஒளியாண்டு. ஒளியானது ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. அப்படி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளி ஒரு வருடத்திற்கு தொடர்ந்து பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த தூரம் தான் 1 ஒளியாண்டு தூரம். அப்படியென்றால் 1 ஒளியாண்டை கிலோமீட்டரில் குறிப்பிட்டால் 9,460,800,000,000 கிலோமீட்டர்.
- நம் வானில் பார்க்கும் நட்சத்திரங்களில் புவிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் பிராக்சிமா செண்டாரி (Proxima Centaur) என்ற நட்சத்திரம் தான். அது சூரிய மண்டலத்தில் இருந்து 4.3 ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. அதாவது அந்த நட்சத்திரத்தில் இருந்து புறப்படும் ஒளி புவியில் இருக்கும் நம் கண்களை அடைய 4.3 வருடங்கள் ஆகும். இன்று நாம் வானில் பார்ப்பது நட்சத்திரங்களின் கடந்த கால பிம்பத்தை தான்.
- ஜோதிட நம்பிக்கை இருக்கும் பலருக்கு திருவாதிரை நட்சத்திரத்தை தெரிந்து இருக்கும். ஜோதிடர்கள் ஜாதகத்தை கணிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளும் 27 நட்சத்திரத்தில் ஒன்றான திருவாதிரை புவியில் இருந்து சுமார் 310 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அந்த திருவாதிரை நட்சத்திரம் இந்த நிமிடம் எப்படி இருக்கும் என்று நாம் பார்க்கவேண்டும் என்றால் நாம் 310 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு நம் வாழ்நாள் பத்தாது.
- நட்சத்திரங்களின் நிகழ்காலத்தையே கணிக்க முடியாத போது. அதை வைத்து நம் எதிர்காலத்தை கணிப்பேன் என்பது எவ்வளவு முரணானது.
JOIN US👇👇👇👇
THANK-YOU ALL
Comments
Post a Comment