துருப்பிடித்த மிதிவண்டி

                        NEWS BOOSTER

துருபிடித்த_மிதிவண்டி


  • இந்த உலகில் அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அனைத்து பொருட்களும் இயங்கிக்கொண்டே இருக்கிறது, நம் சிந்தனை இயங்கிக்கொண்டே இருக்கிறது, சமூகம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. 
 
  • உடனே நமக்கு சில கேள்விகள் எழலாம் உயிருள்ள பொருட்கள் தானே இயங்க முடியும் உயிரற்ற பொருட்கள் எப்படி இயங்க முடியும் அதன் மீது வெளியில் இருந்து ஆற்றல் செலுத்தாத வரையில் எந்த உயிரற்ற பொருளும் இயங்கா நிலையில் தானே இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். 

  • ஒரு மிதிவண்டி இருக்கிறது. அதன் மீது நாம் எறி மதித்தால் மட்டுமே அது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கிறது. இல்லாவிட்டால் ஒரே இடத்தில் நிற்கிறது. எவ்வளவு காலம் ஆனாலும் அதன் மீது நாம் ஆற்றல் செலுத்தாதவரை அது அந்த இடத்தைவிட்டு நகரப்போவது இல்லை. எனவே அது இயங்கவில்லை என்று நாம் அர்த்தம் கொள்கிறோம்.

  • சரி அந்த மிதிவண்டியை அப்படியே நான்கைந்து வருடங்கள் நிருத்தி வைக்கிறோம். இப்போது அந்த மிதிவண்டி நான்கைந்து வருடத்திற்கு முன் நாம் எந்த நிலையில் நிறுத்தி வைத்தோமா அதே நிலையில் தான் இப்போது இருக்குமா? அதில் மாற்றம் எதுவும் நிகழ்ந்தது என்று நாம் கருதிக்கொள்ளலாமா? 

  • கண்டிப்பாக இல்லை. அந்த இரும்பினால் ஆன மிதிவண்டி காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைப் புரிகிறது. எனவே மிதிவண்டி துருப்பிடிக்கிறது பாகங்கள் இத்துப்போகி சிதைகிறது. இப்படி மிதிவண்டியில் உள்ள பருபொருட்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. 

  • பொருட்களை போல மனித சமூகமும் மனித சிந்தனையும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கிறது. காடுகளில் கற்கருவிகளை கொண்டு வேட்டையாடி வந்த மனித சமூகம் பின் ஆண்டான் அடிமை என்ற நிலை மாறி இன்று முதலாளி தொழிலாளி என்ற நிலைக்கு மாறி இருக்கிறது.

  • இப்படி உலகில் இருக்கும் அனைத்து இயங்கிக்கொண்டே இருக்கிறது.

  • நம் முன்னோர்களின் தத்துவம் மரபு இதன் அடிப்படையில் தான் இருந்தது. அவர்கள் அறிவியலின் வழியில் இந்த உலகத்தை அணுகினார்கள் அதிலிருந்து தங்கள் தத்துவத்தை வளர்தெடுத்தார்கள். 

JOIN US👇👇👇👇👇


                THANK-YOU ALL



Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) பணி அனைத்து மாவ்டங்களிலிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசு வேலை இந்திய விமானப்படை டிரேட்ஸ்மேன் பணி

Federal Government work (Constable) Vacancies: 5846