ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!
தினம் ஒரு தகவல்
JOIN US👇👇👇👇
பழமொழிகளை அறிந்து கொள்வோம்!
- 🙏ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!
- 👎விளக்கம்:
- மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
- 👍சரியான விளக்கம்:
- ஊரான் வீட்டு பிள்ளையாகிய தன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.
- 🙏பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
- 👎விளக்கம்:
- மணமான பின், பதினாறு குழந்தைகளை பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசிர்வாதம் செய்வார்கள்.
- 👍சரியான விளக்கம்:
- வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்.
- 🙏ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!
- 👎விளக்கம்:
- நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது.
- 👍சரியான விளக்கம்:
- நன்மை நடப்பதும், தீமை "அழிவதும்" பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
- 🙏 புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து!
- 👎விளக்கம்:
- மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.
- 👍சரியான விளக்கம்:
- புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
- மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புகுத்தி ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.
- 🙏 விருந்தும் மருந்தும் மூன்று நாள்!
- 👎விளக்கம்:
- விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.
- 👍சரியான விளக்கம்:
- ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்.
THANK-YOU ALL
Comments
Post a Comment