சக மனிதன்
தினம் ஒரு தகவல்
எல்லோரும் சமம் தானே
- "அம்மா குப்பை வண்டி மா..."
என காலையில் நாம் கச்சிதமாக ஆபிஸ் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் மணியோசையுடன் வீதியில் ஒரு குரல் கேட்கும்.
- நாம் நேற்று சேர்த்து வைத்த அத்தனை குப்பைகளையும் கெட்டுப்போன கழிவுகளையும் மூக்கை பொத்திக் கொண்டு அந்த குப்பை வண்டியில் கொட்டுவிட்டு திரும்பி பார்ககாமல் வேகமாக வீடு திரும்புவோம்.
- மாடி வீடாக இருந்தால் கீழே இறங்கி வர சோம்பல். அதனால் மேலே இருந்தே கருப்பு கவரில் குப்பைகளை மொத்தமாக கொட்டி சரியா கூட கட்டாமல் மேல் இருந்து தூக்கி போடுவோம். அது வண்டியை அடையும் முன் கட்டு பிரிந்து வண்டியை தள்ளி வந்தவரை அடைந்துவிடும் .
- இப்படி தினம் ஒன்றா இரண்டா..! இது போதாதென்று வேறு இடமே இல்லாது போல் சாக்கடையில் அனைத்து நெகிழிகளையும்(plastics) போட்டு அடைத்து போய் நாற்றம் எடுக்கும். அதை சுத்தம் செய்ய வரும் துப்புரவு பணியாளர்களையும் விட்டு வைக்கின்றோமா? சரியா சுத்தம் பன்றதில்லைனு காலைலையே அந்த திட்டு திட்டுவோம்.
- அனைத்தையும் சகித்துக்கொண்டு "சரிங்கம்மா சரிங்க"னு முகம் சுழிக்காம நம்ம சொல்றபடி சுத்தம் செஞ்சு குடுப்பாங்க. பதிலுககு நாம் நேத்து மிஞ்சின சாதத்தை கவர்ல கட்டி குடுப்போம். அதை வெச்சு வயித்து பசியை கொஞ்சம் போக்கிக்குவாங்க.
- அதுலயும் சமீபத்துல கொரோனா வந்திருக்க நேரத்துல அவங்க பணி மிகப்பெரியது. ஆனா, ஒரு வீட்டில் ஒரு பெண் சரியா சாக்கடை சுத்தம் பண்ணலைனு பணியாளர் பெண்ணை மிதித்து சாக்கடையிலே தள்ளின வீடியோ வைரல் ஆகியது. இன்னோரு செய்தியில அதிகாரம் படைத்த ஒருவர் துப்புரவு பணியாளரை அநாகரிகமாக கேவலபடுத்தி வசை சொற்களை கொண்டு திட்டினார். நாம விளக்கேற்றுவது, கைதட்டுவது, கால் கழுவி விடுவதை இவர்கள் எதிர்பார்ப்பதில்லை.
- தினம் நம்ம சுற்றம் நல்லா இருக்கனும்னு நம்ம யாரும் செய்ய முடியாத கற்பனையில் கூட நினைக்க முடியாத வேலையை செய்திட்டு நம்மகிட்ட எதிர்பாக்குறது எல்லாம் ஒன்று தான்.
- அவங்களையும் சகமனிதராக மதிக்கனும் என்கிறது தான். அவங்க பிள்ளைகளும் இந்த வேலைக்கு போகாம படிச்சு சமூகத்துல நல்ல வாழ்க்கையை வாழனும் அப்டிங்கறது மட்டும் தான்.
- கண்டிப்பா நாம எல்லாரும் அவருக்கு துணையா நிற்போம்ன்னு நான் நம்புறேன். என்ன நிற்போம் இல்ல?!
JOIN US 👇👇👇👇👇
THANK-YOU ALL
Comments
Post a Comment